இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த ஸ்மித்!

Wednesday, August 7th, 2019


தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஊக்கத்தினால் இழந்த இடத்தை மீண்டும் அடைந்துள்ளதாக, அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

பர்மிங்காமில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸின் முதல் போட்டியில், அவுஸ்திரேலிய அணி 251 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த டெஸ்டில் ஸ்டீவ் ஸ்மித் முதல் இன்னிங்சில் 144 ஓட்டங்களும், 2வது இன்னிங்சில் 142 ஓட்டங்களும் விளாசினார்.

இதன்மூலம், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால் ஓர் ஆண்டு காலம் தடையில் இருந்த ஸ்மித், தற்போது மீண்டு வந்துள்ளார். இந்நிலையில் இந்த வெற்றி குறித்து அவர் கூறுகையில்,

‘மீண்டும் ஒரு ஆஷஸ் தொடரில் வெற்றி பெற்றது சிறப்பான ஒன்று. இங்கிலாந்தில் விளையாடுவது மிகவும் பிடித்திருக்கிறது. இந்த புற சூழல் பிரமாதமாக உள்ளது. எங்கள் அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். தொடரின் முதல் போட்டியிலேயே வென்றது ஊக்கமளிக்கிறது.

அவுஸ்திரேலியா மீண்டும் விளையாடுவதும், வெற்றியில் பங்குபெறுவதும் பெருமையாக இருக்கிறது. நான் அவுஸ்திரேலியாவுக்காக முதல் சதத்தை அடிக்கும்போது எப்படி உணர்ந்தேனோ, அந்த அளவிற்கு தற்போது மகிழ்ச்சியாக உள்ளேன்.

18 மாதங்கள் தடையில் இருந்தபோது எனது நண்பர்கள், குடும்பத்தினர் அளித்த ஊக்கத்தினால் மீண்டும் நான் இழந்த இடத்தை அடைந்துள்ளேன். எங்களின் இந்த வெற்றி தொடரும் என நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

Related posts: