இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி !

Wednesday, January 8th, 2020


இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது 20க்கு 20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 142 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பாக குசல் பெரேரா 34 ஓட்டங்களையும் அவிஸ்க பெர்ணான்டோ 22 ஓட்டங்ளையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில் தாகூர் 3 விக்கெட்டுக்களையும் குல்தீப் யாதவ் மற்றும் சாய்னி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.

இந்நிலையில் 143 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 3 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

கே.எஸ்.ராகுல் 45 ஓட்டங்களையும் ஸ்ரேயாஸ் ஐயர் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 3 போட்டிகள் கொண்ட 20க்கு 20 தொடரில் இந்திய அணி 1க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: