இந்திய அணி அபார வெற்றி !

Friday, December 20th, 2019


மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இந்திய அணி, 107 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.

விசாகப்பட்டிணத்தில் நேற்று இடம்பெற்ற இந்தப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 387 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்ப துடுப்பாட்ட வீர்ர்களான ரோஹிட் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் 227 ஓட்டங்களை முதல் விக்கட் இணைப்பாட்டமாக பெற்றனர்.

இந்த நிலையில், 102 ஓட்டங்களுக்கு கே.எல்.ராகுல் ஆட்டமிழக்க 159 ஓட்டங்களில் ரோஹிட் சர்மா ஆட்டமிழந்தார்.

அணித்தலைவர் விராட் கோலி ஓட்டம் எதனையும் பெறாத நிலையில் ஆட்டமிழந்தார். இதேவேளை, 388 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 43.3 ஓவர்களில் 280 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் ஷாய் ஓப் அதிகூடுதலாக 78 ஓட்டங்களைப் பெற்றுக்கெடுத்தார். அணித் தலைவர் கீறன் பெலார்ட்  ஓட்டம் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்தார்.

இந்திய அணி சார்பில் பந்துவீச்சில், குல்தீப் யாதவ் ஹெக்ட்ரிக் விக்கட்டுக்களை கைப்பற்றினர்.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கட் தொடரில் இரு அணிகளும் ஒவ்வொரு போட்டியில் வெற்றிபெற்று 1க்கு 1 என்ற அடிப்படையில் சமநிலையில் உள்ளன.

இந்த நிலையில், தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி, எதிர்வரும் 22ஆம் திகதி கட்டாக்கில் இடம்பெறவுள்ளது.

Related posts: