இந்திய அணியின் முன்னாள் சகல துறை வீரர் ஓய்வு !

இந்தியாவின் முன்னாள் சகல துறை வீரர் டினேஸ் மொங்கையா, அனைத்து வகையான சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2003 உலக கிண்ண தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவான இந்திய அணியில் அவரும் பங்கேற்றிருந்தார். 2007ம் ஆண்டு அவர் பஞ்சப் அணிக்காக விளையாடியதுடன், அந்த காலப்பகுதியில் அவர் ஐ.சீ.எல் என்ற இந்தியன் கிரிக்கட் லீக்கில் இணைந்துக் கொண்டமைக்காக இந்திய கிரிக்கட் கட்டுப்பாடு சபையால் தடை விதிக்கப்பட்டது.
57 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவருக்கு, டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பளிக்கப்படவில்லை. 121 முதற்தரப் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 21 சதங்களைப் பெற்றுள்ளார்.
Related posts:
இறுதிப் போட்டிக்கு சென்றது ஐக்கிய அமெரிக்கா!
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தேர்தல் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம்!
கால்பந்தாட்டத்தில் பற்றிக்ஸீக்கு தேசிய ரீதியில் மூன்றாவது இடம்!
|
|