இந்திய அணியின் பதற்றம் எங்களுக்கு உதவும் – தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் தலைவர் கலிஸ்!

Tuesday, June 4th, 2019


தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் தலைவரும் ஆல்-ரவுண்டருமான கலிஸ் அளித்துள்ள பேட்டியில், உலக கோப்பை போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி தொடர்ச்சியாக 2 தோல்வியை சந்தித்து இருப்பது ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளிக்கிறது.

இதனால் அடுத்த ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணிக்கு கடும் நெருக்கடி இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இது தென்ஆப்பிரிக்க அணிக்கு 3-வது ஆட்டமாகும். இந்திய அணிக்கு முதல் ஆட்டமாகும். ஒரு வாரமாக விளையாடாத இந்திய அணிக்கு முதல் ஆட்டத்தில் பதற்றம் உருவாகலாம் என்று தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் காலிஸ் கூறியுள்ளார். இதனால் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது.

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நமது அணி சிறிய தவறு செய்தாலும் தோல்வியை சந்திக்க நேரிடும் என கூறியுள்ளார்.

Related posts: