இந்தியா வெற்றி.. !

இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இந்திய அணி 59 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இந்த இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி நேற்று ஸ்பெயினில் நடைபெற்றது. போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 279 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் விராட்கோலி 120 ஓட்டங்களையும் சிரயாஸ் ஐயர் 71 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இந்தநிலையில் 280 என்ற வெற்றியிலக்கை நோக்கி மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பெடுத்தாடும் போது மழை குறுக்கிட்டது.
இதன்காரணமாக 46 ஓவர்களாக போட்டி மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் டட்பொட்லுயிஸ் முறையின் அடிப்படையில் 270 ஓட்டங்கள் வெற்றியிலக்காக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 42 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 210 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். போட்டியின் ஆட்டநாயகனாக அணித்தலைவர் விராட்கோலி தேர்வானார்.
Related posts:
|
|