அவுஸ்திரேலிய T-20 தொடர: – லசித் உட்பட 03 முன்னணி வீரர்களுக்கு வாய்ப்பு!

Thursday, October 10th, 2019


இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த பின்னர் அவுஸ்திரேலியா செல்லவுள்ளதுடன், அவுஸ்திரேலிய அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் விளையாடவுள்ளது.

பாகிஸ்தான் இருபதுக்கு 20 தொடரில் விளையாடி வரும் இளம் வீரர்களை கொண்ட இலங்கை அணி, முதல் நிலையான பாகிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை 2-0 என வெற்றிக்கொண்டுள்ளது. அதுமாத்திரமின்றி பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதன்முறையாக இருபதுக்கு 20 தொடர் ஒன்றையும் இலங்கை அணி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இலங்கை இருபதுக்கு 20 குழாத்தில் அதிகமான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பில்லை எனவும் பாகிஸ்தான் தொடரில் விளையாடிய இலங்கை வீரர்களில் இரண்டு அல்லது மூன்று மாற்றங்களே ஏற்படும் என இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவரும், அணியின் முகாமையாளருமான அசந்த டி மெல் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அணித் தலைவராக லசித் மாலிங்க செயற்படுவதுடன், அவர் உட்பட இரண்டு அல்லது மூன்று வீரர்கள் மாத்திரமே அணியில் இணைத்துக்கொள்ளப்படுவர் எனவும் அசந்த டி மெல் மேலும், தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் விளையாடி வரும் இலங்கை அணியின் இளம் வீரர்கள் தங்களுடைய வாய்ப்பினை தக்கவைக்கும் வகையில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: