அவுஸ்திரேலிய காட்டுத்தீ: பூமியை சுற்றி வலையத்தை ஏற்படுத்தும் – நாசா!

Thursday, January 16th, 2020


அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயினால் வெளியான புகைமண்டலம், பூமியை சுற்றி ஒரு வலையத்தை ஏற்படுத்தும் என்று நாசா கணித்துள்ளது.

செய்மதிப் படங்களை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

பல நாட்களாக அவுஸ்திரேலியாவில் பதிவான பெரும் தீக்கனல்களால் வெளியான புகைமண்டலம், தென்னமெரிக்காவின் வான்பரப்பில் பரவியுள்ளது.

இதுசில காலத்தில் பூமியை சுற்றி ஒரு பெரும் வலையத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், தற்போது அவுஸ்திரேலியாவின் வளிமண்டல மாசு நிலைமை அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: