அரசியல் குறித்து மலிங்கவின் செய்தி!

Tuesday, September 10th, 2019


 “பிரபல்யம் என்பது ஆட்சிசெய்வதற்கான தகைமையல்ல. பிரபல்யம் என்பது மக்களின் விருப்பமாகும்.” என இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் லசித் மலிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “எனக்கு அரசியல் தொடர்பில் எதுவும் தெரியாது. பிரபல்யம் என்பது ஆட்சி செய்வதற்கான தகைமையல்ல. நிர்வாகத்திற்கும் பிரபல்யத்திற்கும் இடையில் வித்தியாசமுள்ளது. நான் அந்த வித்தியாசத்தை அறிந்துள்ளேன்.

நான் கிரிக்கெட் விளையாட்டில் மாத்திரமே பிரபலமானவன். கிரிக்கெட் விளையாட்டில் நான் முடிந்தவரை செய்வேன். பிரபல்யம் என்பது ஆட்சிசெய்வதற்கான தகைமையல்ல.

பிரபல்யம் என்பது மக்களின் விருப்பமாகும். எனினும் ஆட்சியென்பது நிர்வாகம் ஆகும். நிர்வாகத்திற்கும் பிரபல்யத்திற்கும் இடையில் வித்தியாசமுள்ளது. நான் அந்த வித்தியாசத்தை அறிந்துள்ளேன்.” என கூறியுள்ளார்.

Related posts: