அமெரிக்க ஓபன் – சாம்பியன் பட்டம் வென்ற பியான்கா!

Sunday, September 8th, 2019


கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான அமெரிக்க ஒபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றது.

இதில், அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும் கனடாவின் பியான்கா ஆண்ட்ரீஸ்குவும் மோதினர். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பியான்கா 6-3, 7-5 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

அறிமுக போட்டியிலேயே கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று அசத்திய 19 வயது நிரம்பிய கனடா வீராங்கனை பியான்காவுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.  கனடா இளம் வீராங்கனைகளில் 2009 க்கு பிறகு பைனலுக்கு முன்னேறிய முதல் வீராங்கனை என்ற பெருமையையும் பியான்கா பெற்றுள்ளார்.

Related posts: