அசுர வளர்ச்சி அடைந்த லசித் மலிங்கா!

ஐசிசி டி-20 சர்வதேச பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியில் செப்டம்பர் 6ம் திகதி நேற்று வெளியிடப்பட்டது.
நியூசிலாந்திற்கு எதிரான கடைசி டி-20 போட்டியில் நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய மூத்த இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, ஐசிசி டி-20 தரவரிசை பட்டியலில் 20 இடங்களை தாண்டி 592 புள்ளிகளுடன் 21 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நான்கு ஓவர்களை வீசி 1 மெய்டின் ஓவர், 6 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார் லசித் மலிங்கா.
2011-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற மலிங்கா, சமீபத்தில் ஒரு நாள் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்றார். தற்போது, டி-20 போட்டிகளில் மட்டுமே மலிங்கா விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று வெளியான தரவரிசை பட்டியலில் ஆப்கானிஸ்தானின் வீரர் ரஷீத் கான் 780 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். நியூசிலாந்து வீரரும் இடது கை சுழற்பந்து வீச்சாளருமான மிட்செல் சாண்ட்னர் ஆறு இடங்களை தாண்டி 5 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
முதல் பத்து இடங்களை பிடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் மட்டும் எட்டாவது இடத்தில் உள்ளார். அதிகபட்சமாக இலங்கை தரப்பில் Akila Dananjaya 597 புள்ளிகளுடன் 20வது இடத்தில் உள்ளார்.
Related posts:
|
|