ஹோமாகமவில் உருவாகின்றது இலங்கையின் மிக பெரிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் !

Monday, May 18th, 2020

இலங்கையின் மிக பெரிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை ஹோமாகமவில் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுமார் 40 ஆயிரம் இருக்கைகளை கொண்ட இந்த மைதானம் ஹோமாகம தியகம பகுதியில் அமைக்கப்படவுள்ளது.

இதன் ஆரம்ப கட்டமாக அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் சம்மி சில்வா ஆகியயோர் குறித்த இடத்தை பார்வையிட்டுள்ளனர்.

சுமார் 26 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படவுள்ள இந்த மைதானத்தின் நிர்மானப்பணிகள் 3 வருடத்திற்குள் பூர்த்தி செய்ய எதிர்பார்ப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

குறித்த மைதானம் பகல் இரவு போட்டிகள் நடைபெறும் மைதானமாக அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts: