ஹொங்கொங் சுப்பர் சிக்ஸ் : இலங்கை அணி 16 ஓட்டங்களினால் வெற்றி..!

ஆறு பேர் கொண்ட ஹொங்கொங் சுப்பர் சிக்ஸ் கிரிக்கட் போட்டி ஹொங்கொங்கில் ஆரம்பித்தது.7 பேர் கொண்ட இந்த குழாமின், இலங்கை அணி தலைவராக பர்வீஸ் மவுரூவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த போட்டியில் கலந்து கொண்டுள்ள இலங்கை அணி முதலாவது போட்டியில் வெற்றி பெற்றது.அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி 16 ஓட்டங்களினால் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 05 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்கள் இழப்பிற்கு 114 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.வெற்றி இலக்கை அடைவதற்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி ,05 ஓவர்கள் நிறைவில் 03 விக்கட்டை இழந்து 98 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.இதேவேளை இலங்கை அணி, பங்களாதேஸ் மற்றும் நியுசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.இந்த போட்டித் தொடர் இன்றைய தினம் மற்றும் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது.
Related posts:
|
|