ஹெராத் ஓய்வு!

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹெராத் ஒருநாள் மற்றும் சர்வதேச டுவென்டி 20 போட்டிகளில்இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
சுழற்பந்து வீச்சாளர் ஹெராத், இதுவரை 67 டெஸ்ட்(297 விக்கெட்), 71 ஒருநாள்(74 விக்கெட்), 17 சர்வதேச டுவென்டி- 20(18 விக்கெட்) போட்டிகளில் விளையாடி உள்ளார்.
இவர் கடைசியாக சமீபத்தில் நடைபெற்றடு வென்டி -20 உலகக்கிண்ண போட்டியில் விளையாடினார்.
இந்நிலையில், முழங்கால் காயத்தால் அவதிப்பட்ட வந்த இவர், ஒருநாள் மற்றும் சர்வதேச டுவென்டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, நான் எடுத்த முடிவு சரியான முடிவு என்றும் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்த உள்ளேன் என கூறியுள்ளார்.
Related posts:
பி.எஸ்.எல் இறுதி ஆட்டம் - லாகூர் செல்ல வீரர்கள் மறுப்பு!
டோனிக்கு பின்னணியில் இருப்பவர் யார்?
இலங்கை கிரிக்கெட் நிறுவத்தின் தலைமை பிரச்சிகளுக்கு தீர்வு காணப்படும் வரை கோப் குழு கூடாது - சபாநாயகர...
|
|