ஹாட்ரிக் விக்கெட்கள் வீழ்த்தி சாதனை!

Sunday, October 29th, 2017

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் வீரர் பஹீம் அஷ்ரப் ஹாட்ரிக் விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் சகலதுறை வீரர் பஹீம் அஷ்ரப் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதில் சிறப்பு என்னவெனில் அவர் வீழ்த்திய மூன்று விக்கெட்களும் ஹாட்ரிக் விக்கெட்களாகும். இதன் மூலம் டி20 போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட்கள் வீழ்த்திய முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை அஷ்ரப் பெற்றார்.

அஷ்ரப் வீசிய 19 வது ஓவரின் நான்காவது பந்தில் இசுறு உடனாவும், ஐந்தாவது பந்தில் மஹேலா உடவட்டாவும், ஆறாவது பந்தில் தஷூன் ஷனகாவும் அவுட்டானார்கள்.அஷ்ரப் ஹாட்ரிக் விக்கெட்கள் வீழ்த்திய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Related posts: