ஹஷிம் அம்லா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு!

Saturday, August 10th, 2019

தென்னாபிரிக்க அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரும் பல ஒருநாள் சாதனைகளுக்கு சொந்தக்காரருமான ஹஷிம் அம்லா அனைத்து விதமான டெஸ்ட், ஒருநாள், டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு விடுத்துள்ளார்

ஹஷிம் அம்லாவின் சர்வதேச ஓய்வு காரணமாக தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரரை, சிறந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரரை இழக்கிறது.

சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெற்றாலும் உள்ளூர் தொடர்களில் ஹஷிம் அம்லா தொடர்ந்தும் விளையாடுவார் என தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Related posts: