ஹர்திக் பாண்ட்யாவின் அதிரடி சதம்!

Monday, August 14th, 2017

 

இலங்கை அணியுடனான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா அதிரடி சதமடித்துள்ளார்.

இலங்கை அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டி கண்டியில் தொடங்கியது. நாணயச்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு ராகுல் மற்றும் தவான் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். இவர்கள் 188 ஓட்டங்களை சேர்த்தனர். ராகுல் 85 ஓட்டங்களிலும், தவான் 119 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பஜாரா 8 ஓட்டங்களிலும், ரஹானே 17 ஓட்டங்களிலும் விக்கெட்டை இழந்தனர். நிதானமாக விளையாடிய கப்ரின் கோலி 42 ஓட்டங்களிலும், அஷ்வின் 31 ஓட்டங்களிலும் ஆட்டமிழக்க, ஹர்திக் பாண்ட்யா 1ஓட்டத்துடனும், சாஹா 13 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சாஹா 16 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். குல்தீப் யாதவ், முகமது ஷமி ஆகியோர் தலா 26, 8 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் கிடைத்தப் பந்துகளை நொறுக்கித் தள்ளினார் பாண்டியா. அதிரடியாக ஆடிய அவர், 86 பந்துகளில் சதமடித்தார். இதில் 7 பவுண்டரிகளும் 7 சிக்சர்களும் அடங்கும். இது டெஸ்ட் போட்டியில் அவருக்கு முதல் சதம். மறுமுனையில் உமேஷ் யாதவ் 3 ஓட்டங்களில் ஆடிக்கொண்டிருக்கிறார். உணவு இடைவேளை வரை இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 487 ஓட்டங்கள் குவித்துள்ளது.  இலங்கை தரப்பில் புஷ்பகுமாரா 3 விக்கெட்டுகளையும், சண்டகன் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Related posts: