ஹபீஸுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!
Saturday, February 15th, 2020பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான மொஹமட் ஹபீஸுக்கு சர்வதேச போட்டிகளில் பந்துவீச விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
மொஹமட் ஹபீஸ் பந்தை வீசி எறிகிறார் எனும் சந்தேகத்தை கடந்த வருடத்தில் நடுவர்கள் வெளிப்படுத்தினர். அவர் பந்துவீசும் போது மணிக்கட்டு 15 பாகைக்கு மேல் வளைவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
எவ்வாறாயினும், இது தொடர்பாக இங்கிலாந்தின் லோபோரோ பல்கலைக்கழகம் பரிசோதனைகளை மேற்கொண்டதுடன், இதன்போது ஹபீஸின் பந்துவீச்சு பாணியில் தவறில்லை என கணிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, மொஹமட் ஹபீஸ் பந்துவீச விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
Related posts:
ஒலிம்பிக் விளையாட்டு பற்றிய சில தகவல்கள்!
நவம்பர் 17ஆம் திகதி ஹபீஸுக்குச் சோதனை!
இலங்கை வருகிறது உலக கிண்ணம்!!
|
|