ஹத்துருசிங்கவுக்கு ஆஸியில் பயிற்சியாளர் பதவி!

Wednesday, July 22nd, 2020

கடந்த 3 வருட காலமாக அதவாது 2011ம் ஆண்டு தொடக்கம் 2014ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அவுஸ்திரேலியாவின் உள்ளூர் கிரிக்கெட் அணிகளில் ஒன்றான New South Wales அணியின் உதவிப் பணிப்பாளராக கடமையாற்றிய இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் சந்திக்க ஹத்துருசிங்க மீண்டும் அவ்வணிக்கு திரும்பி அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் பிரபல பயிற்றுவிப்பாளர்களில் ஒருவரான க்றிஸ் ரோஜர்ஸ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியின் உதவிப் பணிப்பாளர் டொபி ரெட்போட் ஆகியோரும் குறித்த பதவிக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், சந்திக்க ஹத்துருசிங்கவுக்கு இந்த வாய்ப்பு கிட்டியுள்ளமை விசேடமாகும்.

இதேவேளை, சந்திக்க ஹத்துருசிங்க இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வந்த நிலையில், தர்க்க நிலைகள் மேலெழ ஒப்பந்த காலத்திற்கு முன்னரே குறித்த பதவியில் இருந்து நீக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: