ஸ்மித் இருப்பது ஏன்? – ராட்னி ஹாக்!
Thursday, September 28th, 2017
இந்திய அணிக்கெதிரான தொடர் தோல்விக்கு அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்மித் தான் காரணம் என்று அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ராட்னி ஹாக் கூறியுள்ளார்.
அவுஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகளுக்கிடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் மூன்று போட்டிகளில் அவுஸ்திரேலிய தோல்வியை சந்தித்து தொடரை இழந்தது.
அதுமட்டுமின்றி 13 வெளிநாட்டு போட்டிகளில் 11 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளதால், அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்மித் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.இந்நிலையில் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ராட்னி ஹாக், ஸ்மித் தனக்கு விருப்பமானவர்களை மட்டும் அணியின் சேர்ப்பதாகவும், இந்திய அணியுடனான தொடர் தோல்விக்கு ஸ்மித் தான் காரணம் எனவும் கூறியுள்ளார்.அவர் தொடர்ந்து கூறுகையில், ஸ்மித்துக்கு நெருங்கிய மற்றும் பிடித்தமான வீரர்களை மட்டும் அணியில் சேர்த்துக்கொண்டே இருக்கின்றார் என்றும் குறிப்பிட்டே கூறுகிறார்கள் என்றால் ஸ்மித்தின் நெருங்கியவர்களான ட்ராவிஸ் ஹெட், ஆஸ்டான் அகர், ஹில்டன் கார்ட்ரைட் மற்றும் நிக் மெடிசன் ஆகியோர் இந்தியாவுக்கெதிரான ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.இவர்களின் லட்சனங்கள் தான் கடந்த வங்கதேசம் தொடரிலும், அதற்கு முந்தைய தொடர்களிலும் தெரிந்து விட்டதே, இருப்பினும் அவர்களையே ஸ்மித் அணியில் வாய்ப்புக்கொடுத்து வருவது வருத்தமாக உள்ளது என்று கூறியுள்ளார்.
Related posts:
|
|