ஸ்டீவ் ஸ்மித்தின் சொத்து மதிப்பு வெளியானது!

Monday, April 2nd, 2018

ஸ்டீவ் ஸ்மித்தின் நிகர சொத்து மதிப்பு சுமார் $ 19.7 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது,

சிறந்த துடுப்பாட்ட வீரர்களின் வரிசையில் இருக்கும் ஸ்டீவ் ஸ்மித், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால், ஒரு வருடம் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

தனது சிறப்பான ஆட்டத்தால், கிரிக்கெட் உலகில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ள ஸ்மித், சிறந்த 10 துடுப்பாட்ட வீரர்களின் பட்டியலில் இருக்கிறார்.

ஒரு வருடம் தடை என்றாலும், அது இவரது கிரிக்கெட் வாழ்க்கையோடு சேர்ந்து இவரது வருமானத்தையும் பாதித்துள்ளது.ஸ்டீவ் ஸ்மித்தின் நிகர சொத்து மதிப்பு சுமார் $ 19.7 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது,

2017-2018 கிரிக்கெட் பருவத்தில் அவரது சம்பளம் $ 1 மில்லியன் ஆகும். இது தவிர, ஒவ்வொரு போட்டிக்கும் ஏற்றவாறு சம்பளம் பெறுவார். டெஸ்ட் போட்டிகள் என்றால் இவரது சம்பளம் $14,110 ஆகும். ODI போட்டி என்றால் $7,055, T20I என்றால் $5,644 வாங்குவார்.

அவரது அணியின் ஆஷஸ் வெற்றிக்கு $ 304,779 போனஸ் பெற்றார். இவரது சொந்த இடமான சிட்னியில், $7 million சொத்துமதிப்பு உள்ளது.

Related posts: