ஸ்டீவன் ஸ்மித் சாதனை!

Wednesday, December 7th, 2016

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஸ்டீவன் ஸ்மித் செய்த சாதனைகளை நிலைநாட்டியுள்ளார் அவை வருமாறு.

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்டீவன் ஸ்மித் 164 ஓட்டங்கள் குவித்தார்.

*இந்த ஆட்டத்தில் அவுஸ்திரேலிய தலைவர் 27 வயதான ஸ்டீவன் ஸ்மித் 164 ஓட்டங்கள் விளாசினார். இது அவரது தனிநபர் அதிகபட்சமாகும். மேலும் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவித்த அவுஸ்திரேலிய தலைவர் என்ற சாதனையை ரிக்கி பொண்டிங்குடன் (2006-ம் ஆண்டு தென்ஆபிரிக்காவுக்கு எதிராக 164 ஒட்டங்கள்) சமன் செய்தார்.

* 2015-ம் ஆண்டு உலக கோப்பையில் மேற்கிந்தியதீவுக்கு எதிராக தென்ஆபிரிக்காவின் டிவில்லியர்ஸ் 162 ஓட்டங்கள் எடுத்ததே இந்த சிட்னி மைதானத்தில் ஒரு வீரரின் அதிகபட்சமாக இருந்தது. அதையும் ஸ்டீவன் ஸ்மித் தாண்டினார்.

* நியூசிலாந்து வீரர் மார்ட்டின் குப்தில் ஒரு நாள் கிரிக்கெட்டில் இதுவரை 5,069 ஓட்டங்கள் சேர்த்துள்ளார். 5 ஆயிரம் ஓட்டங்களை கடந்த 5-வது நியூசிலாந்து வீரர் (ஏற்கனவே ஸ்டீபன் பிளமிங், நாதன் அஸ்டில், பிரன்டன் மெக்கல்லம், ரோஸ் டெய்லர்) என்ற சிறப்பை நேற்றுமுன்தினம் பெற்றார். தனது 132-வது இன்னிங்சில் இந்த மைல்கல்லை எட்டிய குப்தில் அதிவேகமாக 5 ஆயிரம் ஓட்டங்களை கடந்த நியூசிலாந்து வீரர் ஆவார்.

* 2 விக்கெட்டுகள் வீழ்த்திய அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பாவின் விக்கெட் எண்ணிக்கை இந்த ஆண்டில் 30 ஆக (19 ஆட்டம்) உயர்ந்தது.

இதன் மூலம் 2016-ம் ஆண்டில் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர் வரிசையில் முதலிடத்தை பிடித்தார். ஜான் ஹேஸ்டிங்ஸ் (அவுஸ்திரேலியா), ஆடில் ரஷித் (இங்கிலாந்து) தலா 29 விக்கெட்டுடன் அடுத்த இடத்தில் உள்ளனர்.

b9ed25col5922145614846_5075686_05122016_aff_cmy

Related posts: