ஷரபோவாவின் முதல் வெற்றி!

Tuesday, October 17th, 2017

ஊக்கமருந்து பயன்படுத்தியதால் 15 மாதங்கள் தடைக்குபின்னர் திரும்பிய ரஷிய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா டியான்ஜின் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார்.

சீனாவில் நடந்து வரும் டியான்ஜின் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை மரியா ஷரபோவா பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்காவை எதிர்கொண்டார்.தொடக்கத்தில் 1-4 என்ற புள்ளிக் கணக்கில் பினதங்கினாலும் அதன் பின் சரிவிலிருந்து மீண்டு 7-6 7-6 (10-8) என்ற நேர் செட்களில் அரினா சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தினை கைப்பற்றினார்.

கடந்த ஏப்ரல் மாதம் தடைக்கு பின் களத்திற்கு திரும்பிய ஷரபோவா வென்ற முதல் சாம்பியன் பட்டம் இதுவாகும்.இத்துடன் 36 சர்வதேச பட்டங்களை வென்றிருக்கும் ஷரபோவா ஐந்து முறை கிராண்ட்ஸலாம் பட்டங்களையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: