ஷமியின் மனைவி கூறியது என்ன?- வெளியானது  அதிர்ச்சி செய்தி!

Tuesday, March 27th, 2018

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி விபத்தில் அடிபட்டு சிகிச்சை எடுத்து வரும் நிலையில், தன் கணவருக்கு எவ்வித கெடுதலும் ஏற்படக் கூடாது என அவரின் மனைவி ஹசின் ஜஹான் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, டேராடூனில் இருந்து காரில் டெல்லி வரும்போது விபத்தில் சிக்கியதில் லேசான காயம் அடைந்தார்.அதனைத் தொடர்ந்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தலையில் தையல்கள் போடப்பட்டுள்ளன.

தற்போது முகமது ஷமி மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வரும் நிலையில், அவரின் மனைவி ஹசின் ஜஹான் தன் கணவரின் நிலை குறித்து கவலையடைந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘ஷமிக்கு எவ்வித கெடுதலும் ஏற்படக்கூடாது. அவர் என் எதிரி அல்ல. அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால், என்னால் நிம்மதியாக இருக்க முடியாது. அவர் உடல்நலம் தேறி வரவேண்டும் என அல்லாவை வேண்டுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

Related posts: