வேம்படி மகளிர் கல்லூரிக்கு பளுதூக்கலில் 2 பதக்கங்கள்!

Friday, July 6th, 2018

தேசியமட்ட பாடசாலைகளுக்கிடையிலான 17 வயதுப்பிரிவு பளுதூக்கல் போட்டியில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அணிக்கு ஒரு தங்கப் பதக்கமும் ஒரு வெண்கலப் பதக்கமும் கிடைத்தது.

17 வயதுப் பிரிவினருக்கான போட்டிகள் திருகோணமலையில் நடைபெற்றது. இப் போட்டியில் 17 வயதுப் பிரிவினருக்கான பளுதூக்கலில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த நிலோஜினி பிரதாபன் முதலிடத்தைப் பெற்றார்.

அதே பாடசாலையைச் சேர்ந்த கேதாரணி ராஜேஸ்வரன் மூன்றாமிடத்தை பெற்றுக்கொண்டார்.

நிலோஜினி பிரதாபன், அண்மையில் நடைபெற்ற 44 ஆவது தேசிய திறந்த விளையாட்டு விழாவில் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts: