வெஸ்ட் இண்டீஸ் வீரர் சாமுவேல்ஸ் ஓய்வுபெற முடிவு?
Thursday, July 28th, 2016
டி20 போட்டியில் ஆர்வம் காட்டும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சாமுவேல்ஸ் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் முடிவில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன் சாமுவேல்ஸ். டி20 உலக கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிக்கு வழிவகுத்தவர். கிறிஸ்கெய்ல், போலார்டு, டுவைன்பிராவோ போன்றோர் டி20 போட்டிகளில் ஆர்வம் காட்டுகின்றனர். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம், டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவோருக்கு சரியான ஊதியத்தை வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அனுபவமில்லாத இளம் வீரர்கள் விளையாடியதால் அந்த அணி முதல் டெஸ்ட்டில் இன்னிங்ஸ் தோல்வியை தழுவியது. வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் விக்கெட் கீப்பரும், தற்போதைய வர்ணணையாளருமான ஜெப்டுஜான், சாமுவேல்ஸூக்கு இது கடைசி டெஸ்ட் தொடர் என தெரிவித்தார்.
அது தொடர்பான ஆலோசனையில் சாமுவேல்ஸ் இருப்பதாக கூறப்பட்டாலும், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|