வெளியேறியது ஜமைக்கா அணி!

Saturday, September 9th, 2017

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற வரும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் நாக் அவுட் சுற்றில் சங்ககாரா தலைமையிலான ஜமைக்கா தல்லாவாஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் கயானா அமேசான் வோரியர்ஸ் அணியிடம் தோல்வியடைந்து தொடரலிருந்து வெளியேறியது.

முன்னதாக, முதலாவது பிளே ஆப் சுற்றில் வெற்றிப்பெற்ற கிரிஸ் கெயில் தலைமையிலான சென். கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியட்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முதலாவது அணியாக தகுதிப்பெற்றது.

இந்நிலையில், புள்ளிப்பட்டியலில் இரண்டாவது, மூன்றாவது இடத்திலிருந்த ஜமைக்கா தல்லாவாஸ் மற்றும் கயானா அமேசான் வோரியர்ஸ் அணிகள் மோதின.த்ரினேடாட் பிரைன் லாரா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற கயானா அமேசான் வோரியர்ஸ் தரப்பு குமார் சங்கக்கார தலைமையிலான ஜமைக்கா தல்லாவாஸ் அணியினை முதலில் துடுப்பாட அழைத்தது.அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஜமைக்கா அணி, சங்கக்காராவின் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 168 ஓட்டங்கள் குவித்தது.சிறப்பாக விளையாடி சங்கக்காரா 38 பந்துகளில் 7 பவுண்டரிகளை விளாசி 57 ஓட்டங்கள் எடுத்தார். கயானா அணி தரப்பில் ராசித் கான் 3 விக்கெட்டுக்களையும், ஸ்டீவன் ஜேக்கப்ஸ் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.இதனையடுத்து, 169 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கயானா அணி, நியூசிலாந்து வீரர் லூக் ரோன்ச்சியின் அபார ஆட்டத்தால் வெற்றி இலக்கை வெறும் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 17.5 ஓவர்களில் அடைந்தது.ரோன்ச்சி 33 பந்துகளில் 5 சிக்சர், 5 பவுண்டரி விளாசி 70 ஓட்டங்களை எடுத்தார். ஜமைக்கா அணி தரப்பில் மஹமதுல்லாஹ் மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.நடப்பு சாம்பியனான சங்கக்காரா தலைமையிலான ஜமைக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.இப் போட்டியில், வெற்றிபெற்றிருக்கும் கயானா அணி 2வது பிளே ஆப் போட்டியில் திரின்பாகோ நைட்ரைடர்ஸ் அணியுடன் மோதவுள்ளது. இதில், வெற்றிப்பெறும் அணி இறுதிப்போட்டியில் கெய்ல் அணியுடன் மோதும்.

Related posts: