வெளியில் தான் டோனி உட்கார வேண்டும்: கௌதம் காம்பீர் !

Monday, August 21st, 2017

இந்திய அணிக்கு பல்வேறு வெற்றிகளை தேடித்தந்தவர் டோனி. இவர் தலைமையிலான இந்திய அணி மூன்று வித கிண்ணங்களை கைப்பற்றி சாதனை படைத்தது.

அதன் பின் டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வு, ஒருநாள் அணித்தலைவர் பதவியில் இருந்து விலகல் என டோனி சில அதிரடி முடிவுகளை எடுத்தார்.

தற்போது அணியில் விளையாடி வரும் இவருக்கு நெருக்கடி அதிகரிக்க துவங்கியுள்ளது. ஏனெனில் சமீபகாலமாக டோனியின் ஆட்டம் சிறப்பாக இல்லை.

அதனால் வெளியில் இளம் வீரர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே இந்திய அணியில் இடம் என்று தேர்வு குழு தலைவர் பிரசாத் தெரிவித்திருந்தார்.

மேலும் டோனி அவரது இடத்தை கெட்டியாக பிடித்து கொள்ள போராட வேண்டியிருக்கும் என்று வேறு கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்திய அணியில் மற்றொரு துவக்க வீரரான கவுதம் காம்பீர், டோனி 2019- உலகக் கிண்ணம் அணியில் ஆட வேண்டும் என்றால் அவர் கண்டிப்பாக நன்றாக விளையாட வேண்டும்.யாராக இருந்தாலும் சரி அது டோனியாக இருக்கட்டும் மனீஸ் பாண்டேவாக இருக்கட்டும் நாட்டுக்காக ஆட தெரிவு செய்யப்பட நன்றாக ஆடினால் தன் முடியும்.

ஒத்துக்கொள்கிறேன் டோனி இந்திய அணிக்காகா நிறைய சாதனைகள் புரிந்துள்ளார். ஆனால், அது பழைய கதை. நாம் நிகழ்காலத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.நன்றாக விளையாடாத பட்சத்தில் அவரும் அணிக்கு வெளியில் தான் உக்கார வேண்டும் என்று கூறியுள்ளார்.

Related posts: