வெளிநாட்டு வீரரை பாராட்டும் சங்ககாரா!

Wednesday, November 14th, 2018

தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயினை இலங்கை அணியின் ஜாம்பவான் சங்ககாரா புகழ்ந்துள்ளார்.

டுவிட்டரில் கிரிக்கெட் விடயமான கருத்துகளை பகிர்வதை குமார் சங்ககாரா வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் டுவிட்டரில் தென் ஆப்பிரிக்க வீரர் கிரையம் ஸ்மித் வீடியோ ஒன்றை பதிவிட்டார்.

அதில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அபாரமாக பந்துவீசி விக்கெட்களை வீழ்த்திய தொகுப்பு இடம்பெற்றிருந்தது.

அந்த பதிவை டேக் செய்து குமார் சங்ககாரா ஒரு பதிவை வெளியிட்டார்.

அதில், ஸ்டெயின் என்னவொரு அற்புதமான பவுலர்! கிரிக்கெட்டுக்காக எல்லாவற்றையும் அர்ப்பணிப்பவர் என பதிவிட்டுள்ளார்.

Related posts: