வெற்றி பெறுமா  இலங்கை!

Monday, June 13th, 2016

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக  362 ஓட்டங்கள்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 32 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றது.

தனது முதலாவது இன்னிங்ஸில் 416 ஓட்டங்களைப் பெற்ற இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில்  7 விக்கட்டுக்களை இழந்து 233 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.

இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி சார்பாக அலெக்ஸ் ஹெல்ஸ் 94 ஓட்டங்களையும் குக் ஆட்டமிழக்காமல் 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இலங்கை அணி சார்பாக பந்துவீச்சில் பிரதீப் மற்றும் எரங்க தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி சார்பாக கருணாரத்ன 19 ஓட்டங்களையும் சில்வா 12 ஓட்டங்களையும் பெற்று களத்திலுள்ளனர்.

இலங்கை அணி வெற்றிபெற வேண்டுமானால்  5 ஆவது நாளான இன்று 10 விக்கெட்டுக்கள் கைவசம் இருக்கின்ற நிலையில் 330 ஓட்டங்களைப்பெறவேண்டும்.

3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இலங்கை அணி தனது ரசிகர்களின் கனவை நனவாக்க இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இப் போட்டியில் ஆறுதல் வெற்றிபெறுமாவென பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related posts: