வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது முதல் டெஸ்ட் போட்டி!

Friday, March 26th, 2021

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி களத்தடுப்பை தேர்வு செய்ததை அடுத்து முதலில் துடுப்பாடிய இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்சில் 169 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

தொடர்ந்து தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 271 ஓட்டங்களை பெற்று கொண்டது.

இதனையடுத்து தமது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பாடிய இலங்கை அணி 476 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணியின் பெத்தும் நிசங்க  103 ஓட்டங்களையும் நிரோஷன் திக்வெல்ல  96 ஓட்டங்களையும் ஓசத பெர்ணான்டோ  91 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

இந்தநிலையில் 375 என்ற வெற்றியிலக்குடன் தமது இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கட்களை இழந்து 236 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

Related posts: