வெற்றியில் திருப்தியில்லை – தினேஷ் சந்திமால்.!

Monday, January 22nd, 2018

இலங்கை மற்றும் சிம்பாப்பே ஆகிய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் 4வது போட்டியில் இலங்கை அணி 5 விக்கட்டுக்களால் நேற்று(21) வெற்றி பெற்றது.

அணியின் வெற்றி குறித்து போட்டியின் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமால்,

“..இலங்கை அணி இன்னும் சிறப்பாக விளையாட வேண்டியுள்ளது. போட்டியில் இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயற்பட்டதாகவும் , துடுப்பாட்டத்தில் ஆரம்பம் சிறப்பாக அமைந்த போதும் போட்டியை நிறைவு செய்வது தொடர்பில் நடுத்தர வீரர்கள் இன்னும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

இதை விட சிறப்பான வெற்றியொன்றை நேற்றைய போட்டியில் பெற வாய்ப்பு இருந்தது”என தினேஸ் சந்திமால் குறிப்பிட்டார்.

முக்கோணத் தொடரின் இலங்கை அணி கலந்து கொண்ட முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த இந்த தொடரின் அடுத்த போட்டி சிம்பாப்பே மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் எதிர்வரும் 23ஆம் திகதி டாக்காவில் இடம்பெறவுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts: