வெற்றிபெறுமா இலங்கை அணி!

Saturday, February 4th, 2017

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது சர்வதேச ஒரு நாள் போட்டி இன்று ஜொகனஸ்பேர்க்கில் நடைபெறவுள்ளது. இன்று நடை­பெற்­ற­வுள்ள மூன்­றா­வது ஒருநாள் போட்­டியில் இலங்கை அணி கட்­டாய வெற்­றியைப் பெற­வேண்­டிய நிர்ப்­பந்­தத்தில் உள்ளது.

ஐந்து போட்டிகளைக் கொண்ட தொடரில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள தென் ஆபிரிக்க அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில், இன்றைய போட்டி இலங்கை அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. உபுல் தரங்க தலைமையில் இலங்கை அணியும், ஏ. பி. டி. வில்லியர்ஸ் தலைமையில் தென்னாபிரிக்க அணியும் களமிறங்கவுள்ளன.

இதேவேளை, தென்னாபிரிக்க அணியின் அதிரடி ஆட்டக்காரரான டேவிட் மில்லர் இரண்டாவது போட்டியின் போது ஏற்பட்ட கைவிரல் உபாதை காரணமாக இன்றைய போட்டியில் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Southafrica-vs-srilanka

Related posts: