வெற்றிக்கு காரணம் கூறும் சந்திமால்!!
Tuesday, February 20th, 2018
பங்களாதேஷுடன் இடம்பெற்ற டெஸ்ட் , ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டித் தொடர்களை கைப்பற்றியமைக்கான முக்கிய காரணம் அணியென்ற வகையில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டமையே என இலங்கை அணியின் தலைவர் தினேஸ் சந்திமால் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷுன் இடம்பெற்ற இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்திருந்தார்.
அதன்படி , எதிர்வரும் போட்டித் தொடர்களுக்கு இளம் வீரர்களுடனான அனுபவம் வாய்ந்த அணியொன்று தம்வசம் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை அணி எதிர்கொள்ளும் அடுத்த முக்கோண போட்டித் தொடர் எதிர்வரும் மாதம் 6ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இலங்கையில் இடம்பெறும் இந்த தொடரில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் கலந்து கொள்ளவுள்ளன.
Related posts:
மீண்டும் சந்திப்போம்: நெய்மருக்கு வாழ்த்து தெரிவித்த மெஸ்சி
டேவிட் பெக்காமுக்கு 6 மாதம் டிரைவிங் செய்ய தடை!
ஆப்கானிஸ்தானை வென்றது இலங்கை !
|
|