வென்றது அராலி சரஸ்வதி!
Friday, August 5th, 2016சுன்னாகம் கிழக்கு அம்பாள் விளையாட்டுக் கழகம் நடத்திய வருடாந்த விளையாட்டு விழாவில் பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டியில் அராலி சரஸ்வதி மகா வித்தியாலய அணி கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.
தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மைதானத்தில் நடைபெற் இந்தச் சுற்றுப்போட்டியில் 10 அணிகள் பங்குபற்றின. முதற்சுற்று ஆட்டங்கள் லீக் முறையில் நடைபெற்று தொடர்ந்து அரையிறுதி, இறுதி என நடத்தப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) நடைபெற்ற இறுதிப்போட்டியில்அராலி சரஸ்வதி மகா வித்தியாலய அணியை எதிர்த்து சுழிபுரம் விக்ரோரியாக் கல்லூரி அணி மோதியது. இப்போட்டியில் அராலி சரஸ்வதி மகா வித்தியாலய அணி 17:11 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றுச் சம்பியனாகியது.
Related posts:
ஆட்டநாயகன் விருதில் அப்ரிடி சாதனை
கோஹ்லி ஆவேச பதில்!
காற்பந்தாட்ட சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழுவில் வடக்கு தமிழர்கள் மூவர்!
|
|