வி. பி. எல். உதைபந்தாட்டத் தொடர் – மகுடம் சூடியது !
Thursday, May 10th, 2018
புத்தூர் மணற்பதி வீனஸ் விளையாட்டுக் கழகத்தினால் நடத்தப்பட்ட வி.பி.எல். உதைபந்தாட்டத் தொடர் அண்மையில் ஆரம்பமாகி நடைபெற்று வந்த நிலையில் அதன் இறுதிப் போட்டி கடந்த திங்கட்கிழமை புத்தூர் வீனஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
இவ் இறுதிப் போட்டியில் யங்ஸ்ரார் அணியும் யுனைட்டட் எவ்.சி அணியும் மோதிக்கொண்டன.கிண்ணத்தை வெல்லப்போகும் அணி எது என்கின்ற ரசிகர்களின் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய இரண்டு அணியினருக்கும் இடையில் மிக விறுவிறுப்பான போட்டி நடைபெற்றது.
இரண்டு அணியினரும் கோல் போட பல முயற்சிகளை செய்தும் ஆட்டநேர முடிவு வரை எந்த அணியும் கோல் எதனையும் போடவில்லை.இதனால் போட்டி சம நிலையில் முடிவடைய வெற்றியைத் தீர்மானிக்கும் சமநிலை தவிர்ப்பு உதை வழங்கப்பட்டது.கிடைத்த சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திய யங்ஸ்ரார் அணி 05:04 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கிண்ணத்தைக் கைப்பற்றியது.
போட்டியின் ஆட்ட நாயகனாக யங்ஸ்ரார் அணியின் க.கௌதீபன் தெரிவு செய்யப்பட்டதுடன் தொடர் நாயகனாக யுனைட்டெட் எவ்.சி அணியின் வீரர் ப.சுரேன் தெரிவு செய்யப்பட்டார்.சிறந்த கோல் காப்பாளராக யுனைட்டெட் எவ்.சி அணியின் சி.சதுர்சன் தெரிவு செய்யப்பட்டார்.
Related posts:
|
|