விஸ்வரூபம் எடுத்த சங்ககாரா!

வங்கதேசத்தில் பிபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் மற்ற நாடுகளைச் சேர்ந்த அணி வீரர்களும் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
அது போல் இலங்கை அணியைச் சேர்ந்த முன்னாள் வீரர் சங்ககாரா வங்கதேசத்தின் டாக்கா அணிக்காக விளையாடி வருகிறார். இத்தொடரில் நேற்றைய ஆட்டத்தில் டாக்கா அணியும், டைனமிட்ஸ்- ராஜ்ஷாகி அணிகளும் மோதின.
இப்போட்டியில் டாக்கா அணிக்காக விளையாடிய குமார் சங்காராவின் அதிரடி ஆட்டம் பார்வையாளர்களை குதூகலமடைய வைத்தது. இதில் அதிரடி ஆட்டத்தை காட்டிய சங்காரா 46 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் என 66 ஓட்டங்கள் குவித்தார்.
இப்போட்டியில் சங்காராவின் டாக்கா அணி இறுதி கட்டத்தில் தோல்வியை சந்தித்தது. இதனால் சங்ககாராவின் அதிரடி ஆட்டமும் வீண்போனது. இருப்பினும் இதுவரை 7 போட்டிகள் விளையாடியுள்ள டாக்கா அணி 4 வெற்றிகள் மற்றும் 3 தோல்விகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.
Related posts:
|
|