விஷேட வேகப் பந்து வீச்சு பயிற்சியாளராகிறார் வாஸ்!
Saturday, July 22nd, 2017இலங்கை வந்துள்ள இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் நடைபெறவுள்ள கிரிக்கட் போட்டித் தொடரில் இலங்கையின் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் பந்துவீச்சாளர் சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணியின் விஷேட வேகப் பந்து வீச்சு பயிற்சியாளராக இவர் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் இந்தியாவிற்கிடையிலான கிரிக்கட் போட்டித் தொடர் வரும் 26ம் திகதி ஆரம்பமாகின்றது.
இந்தத் தொடரில் முதல் போட்டியாக இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடருக்கு ரங்கன ஹேரத் இலங்கை அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Related posts:
இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் கேள்விக்குறி - அர்ஜுன
யாழ். வலய பெண்கள் எல்லே போட்டி வாதரவத்தை விக்னேஸ்வரா சம்பியன்!
பாகிஸ்தான் அணி அபார வெற்றி!
|
|