விழிப்புலனற்றோருக்கான உலகக் கிண்ண ஒருநாள் போட்டித்தொடர் ஆரம்பம்

Tuesday, January 9th, 2018

விழிப்புலனற்றோருக்கான உலகக் கிண்ண ஒருநாள் போட்டித் தொடர் டுபாயில் நேற்று ஆரம்பமாகி எதிர்வரும் 21ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதில் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகள் பங்கேற்கவுள்ளன.

இலங்கை சார்பாக 16 வீரர்கள் அணியில் இடம்பிடித்துள்ளனர். சந்தன தேஷப்பிரிய தலைவராகவும் தினேஸ் மத்துகம உப தலைவராகவும் செயற்பட உள்ளனர். லக்ஷான் தேவப்பிரியபயிற்றுவிப்பாளராக பணியாற்றுகின்றார்.

இலங்கை முதல் சுற்றில் 5 போட்டிகளில் பங்கேற்க உள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதலாவது போட்டி அவுஸ்திரேலிய அணியுடன் இடம்பெறும். குறித்த போட்டியில்இலங்கை விழிப்புலனற்றோர் கிரிக்கெட் அணி பங்குபற்றுவதற்கு புறப்பட்டுச் சென்றுள்ளது.

Related posts: