விளையாட அரசாங்க அனுமதி வேண்டும்!
Wednesday, May 10th, 2017பாகிஸ்தான் அணிக்கெதிராக இருதரப்பு கிரிக்கெட் தொடரொன்றில் விளையாடுவதற்கு முன்பாக, இந்திய அரசாங்கத்தின் அனுமதி, தமக்குத் தேவைப்படுவதாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.
இரு நாட்டுக் கிரிக்கெட் சபைகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மதித்து, கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடவில்லை என்பதால், அது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, அண்மையில் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதற்குப் பதிலளித்துள்ள இந்தியா, அந்த ஒப்பந்தம், வெறுமனே கடிதம் எனவும் உத்தியோகபூர்வமான ஒப்பந்தம் கிடையாது எனவும் தெரிவித்தது. எனினும், அரசாங்கத்தின் அனுமதி கிடைக்குமாயின், அந்தப் பொறுப்பை நிறைவேற்ற விரும்புவதாக, இந்தியா குறிப்பிட்டுள்ளது.
Related posts:
கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்
இந்தியா வெற்றி பெறுமா?
பாகிஸ்தானில் பாதுகாப்புடன் சுதந்திரமும் இல்லை - பயிற்சியாளர்!
|
|