விளையாட்டு விரர்களுக்கு குமார் சங்கக்கார ஆலோசனை!

Sunday, September 8th, 2019

சர்வதேச கிரக்கெட் விளையாட்டின் ஊழல் சம்பவங்களில் 43 இல் 23 ஊழல் சம்பவங்கள் இலங்கையில் இருந்து பதிவாகியுள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பு, என்.சீ.சீ கிரிக்கட் கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு இதனை தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த சங்கக்கார, துரதிஷ்டவசமாக அண்மைய காலத்தில் ஊழல் தொடர்வில் சில சம்பவங்கள் இலங்கையில் பதிவாகியுள்ளன. தற்போது விளையாடும் அல்லது விளையாடிய வீரர் ஒருவரேனும் இவ்வாறான குற்றச்சாட்டை விரும்புவதில்லை. இன்று சர்வதேச கிரிக்கட் விளையாட்டில் இடம்பெற்ற ஊழல் சம்பவங்களில் 43 இல் 23 ஊழல் சம்பவ்ஙகள் இலங்கை தொடர்பிலாகும். இலங்கை இதில் இருந்து மீள வேண்டும். விளையாட்டு கழகமாக, கிரிக்கட் அணியாக இந்த விளையாட்டை மிகவும் தூய்மையாக வைத்துக் கொள்ள பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும். அனைவரையும் தெளிவு படுத்துவதன் ஊடாவே அதனை ஆரம்பிக்க முடியும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்

Related posts: