வில்லியர்ஸ் அதிரடியால் ட்ரைடன்ஸ் மீண்டும் வெற்றி!
Thursday, July 14th, 2016
மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்றுவரும் கரிபியன் பிரிமியர் லீக் தொடரின் இன்றைய போட்ரியோட்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ட்ரைடன்ஸ் அணி 25 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
தென்னாபிரிக்க அணியின் வில்லியர்ஸின் அதிரடி துடுப்பாட்டத்தின் உதவியுடன் இந்த வெற்றியை ட்ரைடன்ஸ் அணி பெற்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய ட்ரைடன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுகளை இழந்து 180 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
ட்ரைடன்ஸ் அணி சார்பில் வில்லியர்ஸ் 3 ஆறு ஓட்டங்கள் 9 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 82 ஓட்டங்களையும், பூரன் 4 ஆறு ஓட்டங்கள் 2 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 38 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில் கொட்ரெல் 3 விக்கட்டுகளை கைப்பற்றினர்.
183 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய போட்ரியோட்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுகளை இழந்து 155 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 25 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.
இதில் கார்டர் 46 ஒட்டங்களையும், டு பிளசிஸ் 42 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் பார்னெல், இம்ரான் கான் மற்றும் ராம்போல் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளை கைப்பற்றினர்.
போட்டியின் ஆட்டநாயகனாக வில்லியர்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.
Related posts:
|
|