வில்லியர்ஸின் ஓய்வு வியப்பை தருகிறது – அலன் டொனால்ட் கவலை!

Tuesday, June 5th, 2018

வில்லியர்ஸின் ஓய்வு மிகவும் வியப்பாக உள்ளது என்று தனது ஆதங்கத்தை வெளியிட்டார் பிரபல முன்னாள் வீரர் அலன் டொனால்ட்.

மிஸ்டர் 360 டிகிரி என்று அழைக்கப்படுபவர் தென்னாபிரிக்க அணியின் முன்னாள் தலைவர் வில்லியர்ஸ். மைதானத்தின் எந்த திசைக்கும் பந்தை விரட்டும் வல்லமை பெற்றிருந்ததால் இந்தப் பெயர்கொண்டு அவர் அழைக்கப்பட்டார். ஆகச் சிறந்த வீரராக இருந்த போதிலும் அவரால் தென்னாபிரிக்க அணிக்கு ஒரு உலகக் கிண்ணத்தை வென்று கொடுக்க இயலவில்லை.

இங்கிலாந்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடரை தென்னாபிரிக்க அணி கைப்பற்ற வில்லியர்ஸ் துரும்புச் சீட்டாக இருப்பார் என்று கருதப்பட்ட நிலையில் ஐ.பி.எல். தொடர் முடிந்த கையுடன் அவர் பன்னாட்டு அரங்கில் இருந்து விடைபெற்றார். வில்லியர்ஸின் ஓய்வு தொடர்பில் பலரும் பற்பல கருத்துக்களைத் தெரிவித்துள்ள நிலையில் வில்லியர்ஸ் ஓய்வு பெற்றமை தனக்குப் பெரிய ஏமாற்றம் என்றுள்ளார் டொனால்ட்.

Related posts: