வில்லியம்சனின் அபார சதம்: வென்றது நியூசிலாந்து!
Tuesday, January 17th, 2017நியூசிலாந்து- வங்கதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
வங்கதேசம் முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 595 ஓட்டங்களை குவித்து டிக்ளேர் செய்தது.ஷகிப்-அல்-ஹசன் இரட்டை சதமும் (217 ஓட்டங்கள்), முஷ்பீகுர் ரகீம் சதமும் (159 ஓட்டங்கள்) பெற்றுக்கொண்டனர்.
நியூசிலாந்து அணி சார்பில் நைல் வாக்னர் 4 விக்கட்டுகளையும், ட்ரென்ட் போல்ட், டிம் சவுத்தி ஆகியோர் தலா 2 விக்கட்டுகளையும் வீழ்த்தினர். பின்னர் முதல் இன்னிங்சிஸில் விளையாடிய நியூசிலாந்துஅனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 539 ஓட்டங்கள் எடுத்தது.
வங்கதேச அணி சார்பில் கம்ருள் இஸ்லாம் ரப்பி 3 விக்கட்டுகளையும், சுபாஷிஸ் ராய், ஷகிப்-அல்-ஹசன், மஹ்முதுல்லாஹ் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளையும், தஸ்கின் அஹமட் ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர்.வங்கதேசம் இரண்டாவது இன்னிங்சில் சகல விக்கட்டுகளையும் இழந்து 160 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
ட்ரென்ட் போல்ட் மூன்று விக்கட்டுகளையும், நைல் வாக்னர், மிட்செல் சான்ட்னர் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.217 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணி கேன் வில்லியம்சனின்(104 ஓட்டங்கள்) சிறப்பான ஆட்டத்தால் இலகுவாக வெற்றியை தட்டிச் சென்றது.
Related posts:
|
|