விராட் கோலி சாதனைகளை முறியடிக்கும் அம்லா!

Saturday, June 18th, 2016

குறைந்த இன்னிங்சில் 23 சதங்கள் விளாசிய விராட் கோலியின் சாதனையை ஹசிம் அம்லா முறியடித்துள்ளார்.

விராட் கோலி சாதனைகளை வரிசையாக முறியடிக்கும் அம்லா
வெஸ்ட் இண்டீஸில் ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான போட்டியில் தென்ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 343 ரன்கள் குவித்தது. இதற்கு அந்த அணியின் தொடக்க வீரர் அம்லா சதம் அடித்தது முக்கிய காரணம். அவர் 110 ரன்கள் குவித்ததன் மூலம் சர்வதேச போட்டியில் 23 சதங்கள் விளாசியுள்ளார்.

33 வயதாகும் ஹசிம் அம்லா இதுவரை 135 போட்டியில் களம் இறங்கி 132 இன்னிங்சில் 23 சதங்கள் அடித்துள்ளார். இதற்கு முன் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 157 இன்னிங்சில்தான் 23 சதங்கள் அடித்திருந்தார். இதன் மூலம் குறைந்த இன்னிங்சில் 23 சதங்கள் அடித்த விராட் கோலியின் சாதனையை அம்லா முறியடித்துள்ளார்.

27 வயதாகும் விராட் கோலி 171 போட்டிகளில் 163 இன்னிங்சில் விளையாடி 25 சதங்கள் விளாசியுள்ளார்.

இதற்கு முன் விரைவாக 6000 ரன்களை கடந்த (144 இன்னிங்சில்) விராட் கோலியின் சாதனையை அம்லா 126 இன்னிங்சில் கடந்து முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, 5000 ரன்களை விரைவாக கடந்த விராட் கோலியின் சாதனையையும் அம்லாதான் முறியடித்திருந்தார்.

Related posts: