விம்பிள்டனில் பதினொராவது முறையாக அரை இறுதிக்கு சென்ற பெடரர்!

Friday, July 8th, 2016

 11ஆவது முறையாக சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர்  விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

லண்டனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற காலிறுதியில் பெடரர் 6 -− 7 (4), 4 -− 6, 6 -− 3, 7 − -6 (9), 6 -− 3 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் மரின் சிலிச்சை தோற்கடித்தார்.

3 மணி, 17 நிமிடங்கள் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் முதல் இரு செட்களை இழந்த பெடரர், பின்னர் அபாரமாக ஆடி சரிவிலிருந்து மீண்டு வெற்றி கண்டார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டியில் 40ஆவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் பெடரர், அடுத்ததாக கனடாவின் மிலோஸ் ரயோனிச்சை சந்திக்கவுள்ளார்.

மிலோஸ் ரயோனிச் தனது காலிறுதியில் 6 -− 4, 7 -− 5, 5 -− 7, 6 -− 4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் சாம் கியூரியை தோற்கடித்தார்.

இதன்மூலம் விம்பிள்டனில் இரு முறை அரையிறுதிக்கு முன்னேறிய முதல் கனடா வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ரயோனிச். இதற்கு முன்னர் 2014இல் நடைபெற்ற விம்பிள்டன் போட்டியிலும் அவர் அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் கிரா ண்ட்ஸ்லாம் போட்டியில் இரு முறை அரையிறுதிக்கு முன்னேறி தோற்றுள்ள ரயோனிச், இந்த முறை அதிர்ஷ்டம் தனக்கு சாதகமாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related posts: