விமான நிலைய தரையில் படுத்த டோனி!

Tuesday, September 19th, 2017

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் காத்திருப்பு பகுதியில் மற்ற வீரர்கள் எல்லோரும் அமர்ந்திருக்க டோனி அப்படியே கீழே படுத்திருக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது.

கொல்கத்தாவில் நடைபெற உள்ள 2வது ஒருநாள் போட்டியில் பங்கேற்க இந்திய அணி சென்னை விமான நிலையத்திற்கு சென்றுள்ளது.

அப்போது விமான நிலையத்தின் காத்திருப்பு பகுதியில் எஞ்சிய வீரர்கள் அனைவரும் அமர்ந்திருக்க டோனி அப்படியே கீழே படுத்துவிட்டார். இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் தொடர் வெற்றியால் இலங்கை ரசிகர்கள் மைதானத்திற்குள் பாட்டில்களை வீசினர்.

அப்போது அவர்கள் அமைதியாகும் மட்டும் மைதானத்திலேயே குப்புற படுத்தவர்தான் டோனி. கூலிங்கிளாசை அணிந்தபடி டோனி படுத்திருக்க, அருகே சக இளம் வீரர்கள் அமர்ந்துள்ள புகைப்படம் பிசிசிஐ டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு, பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற இந்திய வீரர்கள் இப்படித்தான் ரிலாக்ஸ் செய்கிறார்கள் என்று சொல்கிறது படத்துக்கான தலைப்பு.

 

Related posts: