விமானநிலையத்தில் சிக்கித்தவிக்கும் சிக்கர் தவான் குடும்பம்!

இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சிக்கர் தவான், தென்னாபிரிக்க அணிக்கெதிரான தொடரில் விளையாடுவதற்காக அவரது குடும்பத்துடன் பயணித்திருந்தார். மும்பையிலிருந்து விமானத்தில் பயணித்த, தவான் ஐக்கிய அரபு இராச்சியம் வழியாக சென்று, மீண்டும் மற்றுமொரு விமானத்தின் மூலமாக தென்னாபிரிக்கா செல்ல திட்டமிருந்தார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் தரையிறங்கிய அவரது குடும்பத்தினரை தென்னாபிரிக்கா செல்வதற்கு அங்குள்ள விமானசேவை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
குறித்த அதிகாரிகள் தவானது மனைவி மற்றும் குழந்தைகள் தென்னாபிரிக்க செல்லமுடியாது எனவும், குழந்தைகளின் பிறப்புச் சான்றிதல் மற்றும் ஏனைய ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். எனினும் அந்த சமயத்தில் தவானிடம் குறித்த ஆவணங்கள் இருக்கவில்லை. இதனால் தவானின் குடும்பத்தினர் ஆவணங்கள் வரும் வரையில் டுபாயில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை தவான் மேலும் குறிப்பிடுகையில், இவ்வாறான ஆவணங்கள் தேவை எனில் அதனை மும்பை விமான நிலையத்தில் வைத்து, குறித்த விமானசேவை எமக்கு அறிவித்திருக்க வேண்டும். அதுமாத்திரமின்றி டுபாயில் உள்ள குறித்த விமானசேவையின் அதிகாரி ஒருவர் தவான் மற்றும் அவரது குடும்பத்துடன் முரட்டுத்தனமாக நடந்துக்கொண்டதாகவும் அவரது டுவிட்டரில் பதிவுசெய்துள்ளார்.
உள ரீதியாக தான் உட்பட தன் குடும்பத்தார்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக தவான் குறிப்பிட்டார்.
Related posts:
|
|