விமர்சிக்கும் உரிமை சகலருக்கும் உண்டு!

Wednesday, November 15th, 2017

ஓய்வு பெற வேண்டும் பெறக்கூடாது என்பது தொடர்பில் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும்புயல் வீசிவரும் நிலையில் தன்னை விமர்சிக்கும் உரிமை அனைவருக்கும் உள்ளது என்று கூல் பதில் வழங்கியுள்ளார் டோனி.

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ரி-20 ஆட்டத்தில் டோனி அதிகம் நிதானித்தார். டோனியின் அளவுக்கு அதிகமான நிதானமும் இந்திய அணி

குறித்த ஆட்டத்தில் தோல்வியடைய ஒரு காரணமாக அமைந்தது. இதையடுத்து டோனி ரி-20 ஆட்டங்களிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்று வலியுறுத்தினார் முன்னாள் வீரர் லக்ஷ்மன். அகார்கர், கங்குலி ஆகியோர் லக்ஷ்மனின் கருத்தை ஆமோதித்தனர். ஆனால் இந்திய அணியின் தலைவர் கோக்லி மற்றும் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி இருவரும் லக்ஷ்மனுக்குத் தமது கண்டனத்தைத் தெரிவித்தனர். டோனி அணிக்குத் தேவை என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

கவாஸ்கர், சேவாக், கம்பீர் உள்ளிட்ட வீரர்கள் டோனிக்கு தமது முழு ஆதரவைத் தெரிவித்தனர். எனினும் இந்த விவகாரத்தில் டோனி தொடர்ந்து மௌனமாகவே இருந்து வந்தார். தற்போது அவர் தனது மௌனத்தைக் கலைத்துள்ளார்.

எல்லோரும் கருத்துக்கள் கூறலாம். அதை நாம் மதிக்கவேண்டும். விளையாட்டு என்பது வாழ்க்கை பற்றி அறிவதற்கு ஒரு வழி என்று எப்போதுமே நான் நினைப்பதுண்டு. ஏமாற்றத்தை எப்படி எதிர்கொள்வது. வெற்றி தோல்வியின் போது மக்கள் முன் எப்படித் தோன்றுவது என்பது முக்கியம். அதேவேளையில் விமர்சனம் மீதும் அதே நிலையில் தான் இருக்க வேண்டும். கற்றுக்கொள்வது, தங்களது ஆட்டத்திறனை வளர்த்துக்கொள்வது எப்படி என்பதில் திறந்த மனநிலையோடு இருக்க வேண்டும். இந்திய அணிக்காக நான் விளையாடுவது எனக்கு மிகச் சிறந்த உத்வேகமாக இருக்கும். நாம் ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமே விளையாடுகிறோம். அது ஒரு வருடத்தில் இருந்து 15 வருடம் அல்லது 20 வருடம் கூட இருக்கலாம். இந்தக் காலப் பகுதியில் ஏகப்பட்டவிமர்சனங்கள் வரும். அவற்றை திடமாக எதிர்கொள்ளவேண்டும். சரியான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என டோனி மேலும் தெரிவித்தார்

Related posts: