விபத்தில் கிரிக்கெட் வீரர் பலி!

Friday, September 23rd, 2016

வீதி விபத்தொன்றில் பீ.ஆர்.சி கிரிக்கெட் கழக வீரரான பூர்ண பிரபஷ்வர அளுத்கே உயிரிழந்துள்ளார்.

பொரஸ்கமுவ பகுதியில் இடம்பெற்ற இடம்பெற்ற விபத்திலேயே குறித்த கிரிக்கெட் வீரர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த கிரிக்கெட் வீரர், கெப் வாகனமொன்றுடன் மோதுண்டதிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கெப் வாகனத்தை ஓட்டிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

1994 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி பிறந்த பூர்ண, வலதுகை துடுப்பாட்ட வீரரும் வலதுகை சுழற்பந்து வீச்சாளருமாவார். குறித்த விபத்தில் உயிரிழந்த பூர்ண, கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

14232992_10207505599823672_6870897032300346446_n

Related posts: